கோவை: மீன் மார்க்கெட்டில் கடை ஒதுக்க கோரிக்கை

61பார்த்தது
கோவை: மீன் மார்க்கெட்டில் கடை ஒதுக்க கோரிக்கை
கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று (மார்ச் 17) பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் பவன்குமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், விவசாயிகள் சங்கம், வாரச்சந்தை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மனு அளித்தனர். 

உக்கடம் புதிய மீன் மார்க்கெட்டில் தங்களுக்கு கடை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரி பெண்கள் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி