கோவை: பள்ளி மூடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல்!

80பார்த்தது
கோவை அவிநாசி சாலையில் YWCA( young women Christian association) என்ற அறக்கட்டளையின் கீழ் இயங்கும் மெட்ரிகுலேஷன் பள்ளியை மூடப் போவதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது.
YWCA மெட்ரிகுலேஷன் பள்ளியில் எல்கேஜி முதல் 12-ம் வகுப்பு வரை செயல்படுகிறது. அவிநாசி ரோடு மேம்பாலம் விரிவாக்கம் செய்வதால், பள்ளிக்கான நிலத்தை அவர்கள் எடுத்துக் கொண்டார்கள், அதனால் பள்ளியை மூட வேண்டிய நிலைமைக்கு வந்திருக்கிறோம் என பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது பள்ளி செயல்படும் இடத்தில், வணிக வளாகத்திற்காக ஏதோ கட்டிடம் கட்ட முயற்சி செய்வதாகவும் கூறப்படுகிறது. பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தையும் எந்த பிரயோஜனமும் இல்லை என பெற்றோர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் திடீரென ஒன்று திரண்டு நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். பள்ளியை மூட வேண்டாம் என்று வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவ்வழியாக வாகன ஓட்டிகள், தங்களின் நேரம் விரயமாவதாக கூறி, குழந்தைகளின் பெற்றோர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி