கோவை: விசைத்தறியாளர்கள் போராட்டம் அறிவிப்பு

58பார்த்தது
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சோமனூர், காரணம்பேட்டை, பல்லடம், மங்கலம், அவிநாசி மற்றும் தெக்கலூர் போன்ற பகுதிகளில் விசைத்தறி தொழில் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த பகுதியில் இந்தியாவில் இரண்டாவது பெரிய அளவில் விசைத்தறி தொழிலாளர்கள் உள்ளனர். சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் விசைத்தறிகள் மற்றும் 10 ஆயிரம் விசைத்தறி கூடங்களில் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். 

இதன் ஒரு பகுதியாக, கடந்த 27 நாட்களாக இந்த பகுதிகளில் அனைத்து விசைத்தறி கூடங்களிலும் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடைபெறுகின்றது. விசைத்தறி தொழிலாளர்கள், ஒப்பந்த கூலியில் இருந்து குறைக்கப்பட்ட கூலியை முழுமையாக வழங்கவும், சட்டபூர்வமாக அடுத்தடுத்த கூலிகளை அமல்படுத்தவும், மின் கட்டண உயர்வு மற்றும் விலைவாசி உயர்வுக்கு தீர்வு காணவும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே பல்வேறு கட்ட போராட்டங்களால் உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், மார்ச் 19ஆம் தேதி முதல் முழு வேலை நிறுத்த போராட்டம் தொடங்கப்படும் என விசைத்தறி கூட்டமைப்பின் சார்பில் சங்கச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் இன்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி