கோவை: வ. உ. சி மைதானத்தில் காவல் உதவி ஆய்வாளர் தற்கொலை!

51பார்த்தது
கோவை வ. உ. சி மைதானத்தில் புங்கை மரத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சொக்கலிங்கம் (54) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று இரவு ரோந்து பணியில் இருந்த காவலர்கள் சொக்கலிங்கம் தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சொக்கலிங்கம் பயங்கரவாத தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளராக கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்துள்ளார். இவர் 1997 ஆம் ஆண்டு காவல் துறையில் சேர்ந்தவர். இந்த சம்பவம் குறித்து பந்தய சாலை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சொக்கலிங்கம் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் கோவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி