கோவை: குற்றச் செயல்களைத் தடுக்க துப்பாக்கி ஏந்திய போலீசார்!

61பார்த்தது
கோவை மாவட்டத்தில் குற்றச் செயல்கள் நடைபெறுவதைத் தடுக்கும் பொருட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நேற்று முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்து உட்கோட்டங்களிலும், ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் மூன்று காவலர்கள் கொண்ட குழுவாக துப்பாக்கி ஏந்திய போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்து உள்ளார். பொதுமக்கள் எந்தவித அச்சமுமின்றி தங்கள் பகுதிகளில் நடைபெறும் குற்றங்கள் குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கலாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டு உள்ளார்.
இந்த அதிரடி நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும், உட்கோட்டத்தில் உள்ள அனைத்து முக்கிய இடங்கள் மற்றும் குற்ற சம்பவங்கள் நடைபெறக் கூடிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என்றும் காவல்துறை தெரிவித்து உள்ளது. சட்டத்திற்குப் புறம்பாக குற்றச் செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்து உள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி