கோவை: பாஷா இறுதி ஊர்வலத்திற்கு அனுமதி- பாஜக எதிர்ப்பு

82பார்த்தது
கோவை: பாஷா இறுதி ஊர்வலத்திற்கு அனுமதி- பாஜக எதிர்ப்பு
கோவை தொடர் குண்டுவெடிப்பு கைதி பாஷாவின் இறுதி ஊர்வலத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்யக் கோரி இன்று (டிசம்பர் 17) கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கோவை மாவட்ட பாஜக தலைவர் ரமேஷ் குமார் மற்றும் இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த கோவை மாவட்ட பாஜக தலைவர் ரமேஷ் குமார், கோவை குண்டுவெடிப்பு கைதி பாஷாவின் இறுதி ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி கொடுக்குமேயானால் கோவையில் சட்டம் ஒழுங்கு செத்துப் போய்விட்டது என்று அர்த்தம். எனவே இந்த செத்துப்போன சட்ட ஒழுங்குக்கு வரும் வெள்ளிக்கிழமை துக்க தினம் அனுசரிக்க போகிறோம் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி