கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த சின்சி, கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், நீலாம்பூர் பகுதியில் உள்ள கார் விற்பனை நிறுவனத்தில் பி. எம். டபிள்யூ கார் வாங்க கடந்த ஆண்டு ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்து முன்பதிவு செய்ததாக தெரிவித்தார். பின்னர் தனது நிதி நிலைமை காரணமாக காரை வாங்க முடியவில்லை என கூறி முன்பணத்தை திரும்ப கேட்டபோது, நிறுவனம் பெரிய தொகையை ரத்து கட்டணமாக வசூலித்ததாக குறிப்பிட்டார். இது விதிமீறல் என கூறிய அவர், இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி தங்கவேலு மற்றும் உறுப்பினர்கள் மாரிமுத்து, சுகுணா ஆகியோர், வாகன விற்பனை நிறுவனம் சின்சிக்கு ரூ. 50 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.