கோவை: இசைஞானி இளையராஜாவின் ட்ரூலி லைவ் இன் கன்சர்ட்!

67பார்த்தது
கோவையில் இசைஞானி இளையராஜாவின் ட்ரூலி லைவ் இன் கன்சர்ட் நிகழ்ச்சி மே 17-ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி கோவை புதூரில் உள்ள ஜி ஸ்கொயர் 7 ஹில் கிரவுண்டில் நடைபெறுகிறது. முன்னதாக, இந்நிகழ்ச்சி கொடிசியாவில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், இளையராஜாவின் இசை நிகழ்ச்சியை காண அதிக அளவிலான ரசிகர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மௌன ராகம் குழு முரளி நேற்று கூறுகையில், ஏழு வயது முதல் 70 வயது வரை உள்ள ரசிகர்கள் இளையராஜாவின் இசையை கேட்க ஆர்வமாக உள்ளனர். ரசிகர்களின் வசதிக்காக, போக்குவரத்து நெரிசல் இல்லாமல், எளிதாக வந்து செல்லும் வகையில் ஜி ஸ்கொயர் 7 ஹில் கிரவுண்டில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நான்கு மணி நேரம் நடைபெறும் இந்த இசை நிகழ்ச்சியை ரசிகர்கள் நிம்மதியாக பார்த்து ரசிக்கலாம். மேலும், இங்கு பல நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. தன்னார்வலர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த உதவுவார்கள். மலை சார்ந்த பகுதியில் மாலை நேரத்தில் அமர்ந்து இளையராஜாவின் பாடல்களை கேட்பது ஒரு அற்புதமான அனுபவமாக இருக்கும். 82 வயதிலும் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து இசை விருந்து படைக்கும் இளையராஜாவை கோவை மக்கள் வரவேற்கிறார்கள் என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி