கோவை: கோவையில் விரைவில் மெட்ரோ ரயில்!

66பார்த்தது
கோவை விமான நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டல் அரங்கில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் எம். ஏ. சித்திக் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கோவை மாநகர பகுதியில் அவிநாசி சாலை மற்றும் சத்தியமங்கலம் சாலை ஆகிய பகுதிகளில் மெட்ரோ ரயில் திட்டம் அமைய உள்ளது, தற்கான ஆயத்த பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது என தெரிவித்தார். கோவை மெட்ரோ ரயில் திட்டம் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயாராகி உள்ளது எனவும் இதில் சத்தியமங்கலம் சாலையில் முதல் தளமாக மேட்டூரில் திட்டம் அமையும் எனவும் அவிநாசி சாலையில் நெடுஞ்சாலை துறையினரின் பாலங்கள் இருக்கும் இடத்தில் இரண்டாம் தளமாக அதைவிட உயரத்தில் ஆங்காங்கே மெட்ரோ ரயில் பாலம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார். நீலாம்பூர் பகுதியில் டிப்போ அமைப்பதற்கு தனியாக 16 ஹெக்டர் நிலம் தேவைப்படும் என்றார். இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் அடுத்தடுத்து நடைபெறும் என தெரிவித்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி