கோவை: 131 மதுபாட்டில்களுடன் கைதானவருக்கு திடீர் நெஞ்சுவலி

50பார்த்தது
கோவை: 131 மதுபாட்டில்களுடன் கைதானவருக்கு திடீர் நெஞ்சுவலி
கோவை பீளமேடு போலீசாருக்கு புலியகுளம் ரோடு சவுரிபாளையம் பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது பொது மயானத்தில் ஒருவர் மது பாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். 

அதில் அவர் சவுரிபாளையம் கல்லறை வீதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (42) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 131 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே போலீசார் அவரை கோவை அரசு மருத்துவமனையில் இன்று(பிப் 5)  அனுமதித்தனர். தொடர்ந்து பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி