கோவை: மலைவாழ் பகுதிகளுக்கு இணைய வசதி

58பார்த்தது
கோவை சூலூர் கண்ணம்பாளையத்தில் பள்ளிக்கல்வி துறை சார்பில் மாவட்ட கல்வி அலுவலருக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். 

முன்னதாக இந்த விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர் கிரந்திகுமார் பாடி, கோவை மாவட்டத்திற்கு பள்ளிக் கல்வித் துறை பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளது. மாவட்டத்திற்கு புதிய நூலகம் அமைத்துத் தந்ததற்கு அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், கோவையிலுள்ள அனைத்து ஊடகங்களுக்கும் புனரமைப்பு நிதி கொடுத்ததற்காக அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார். 

பல கோடி ரூபாய் மதிப்பில் பள்ளிகள் அமைக்கப்பட்டு வருவதாகவும், குறிப்பாக அரசூர் பள்ளியில் அமைக்கப்பட்ட ஆய்வுகூடத்தில் மாணவர்கள் மேற்கொள்ளும் கண்டுபிடிப்புகள் மாநில அளவில் பாராட்டப்படுவதாகவும் தெரிவித்தார். அனைத்து பள்ளிகளுக்கும் இணைய வசதி வழங்கப்பட்டு வருவதாகவும், குறிப்பாக 50 மலைவாழ் பள்ளிகளுக்கும் இணைய வசதி வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மாதந்தோறும் நடைபெறும் மாவட்ட பள்ளி ஆய்வுக் கூட்டத்தில் பள்ளிகளில் உள்ள குறைகளை கண்டறிந்து தீர்வுகள் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி