கோவை: காப்பீட்டு நிறுவனம் முதியவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவு

57பார்த்தது
கோவை: காப்பீட்டு நிறுவனம் முதியவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவு
கோவை, ஆலாந்துறை பகுதியைச் சேர்ந்த எம். மகாலிங்கம் (வயது 83) என்பவர், தனது மனைவிக்கு செய்து கொடுத்த காப்பீட்டு தொகையை இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க மறுத்ததால், கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

தனது மனைவி இறந்த பிறகு, இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் காப்பீட்டுத் தொகையை கோரிய போது, 2019 ஆண்டு வரை மட்டுமே தொகை வழங்கப்பட்டது. பின்னர் தொகை வழங்குவது நிறுத்தப்பட்டது. இது குறித்து நிறுவனத்தை தொடர்பு கொண்ட போது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மகாலிங்கம் குறிப்பிட்டார். 

இந்த வழக்கை நேற்று (ஜனவரி 9) விசாரித்த நீதிபதி தங்கவேலு மற்றும் உறுப்பினர்கள் மாரிமுத்து, சுகுணா ஆகியோர், இன்சூரன்ஸ் நிறுவனம் முதியவருக்கு ரூ. 50,000 இழப்பீடு மற்றும் ரூ. 5,000 வழக்கறிஞர் கட்டணம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்தி