கோவை: காயமடைந்த இருவாச்சி பறவை மீட்பு

82பார்த்தது
கோவை மாவட்டம் பேரூர் அருகே உள்ள சென்னனூர், தண்ணீர் பந்தல் பிரிவில் இருந்து அத்திப்பாளையம் செல்லும் சாலை ஓரத்தில் ஒரு மலை இருவாச்சி பறவை காயமடைந்து, பறக்க முடியாத நிலையில் இன்று விழுந்து கிடந்தது. இது குறித்த தகவல் கிடைத்ததும், மதுக்கரை வனச்சரக பணியாளர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் பறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்த இருவாச்சி பறவையை மீட்டு, கோவை மாவட்ட வன அலுவலர் அலுவலகம் அருகே உள்ள பறவைகள் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர். 

மறுவாழ்வு மையத்தில், வனத்துறை மருத்துவர்கள் இருவாச்சி பறவைக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். தற்போது அந்தப் பறவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பறவையின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்த பிறகு, அதன் இயற்கை வாழ்விடத்தில் விடுவிக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி