மேட்டுப்பாளையம் போலீசார் நேற்று சாதாரண ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்குரிய இருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, சேகர் (வயது 67) மற்றும் சாந்தி (வயது 35) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.