கோவை, சுகுணாபுரத்தைச் சேர்ந்த கருப்பசாமி (வயது 42), தொழிலாளி. இவருடைய மனைவி சசிகலா தேவி (36), இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன் உள்ளார். கருப்பசாமி குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால், தம்பதியினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
நேற்று (ஜனவரி 9) குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த கருப்பசாமி, மனைவி மற்றும் மகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த கருப்பசாமி, வீட்டில் இருந்த ஸ்க்ரூ டிரைவரால் மனைவியை குத்தியுள்ளார். பலத்த காயமடைந்த சசிகலா தேவியை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்துள்ளனர்.