கோவை மாநகர் மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில், இந்தி திணிப்பு, நிதிப் பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறுசீரமைப்பில் அநீதி ஆகியவற்றை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நேற்று சௌரிபாளையம் தேர்வீதி திடலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக மாநில மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி, கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தும் போது,
இந்தியாவிற்கு எதிரி சனாதனம் என்ற தத்துவம். வெறும் மதக் கோட்பாடு அல்ல, அதற்குள் ஒரு மொழிக் கோட்பாடு இருக்கிறது. அந்த மொழிக்குள் உயர்தனி செம்மொழி என்பதை ஒழிக்கிற சமஸ்கிருதம் என்ற மொழி கோட்பாடுதான் இருந்தது. எங்கள் மொழி மீது எந்தவித ஆதிக்கம் வந்தாலும், எதிர்த்து நிற்போம் என தற்போது துணை முதல்வராக இருக்கிற உதயநிதி ஸ்டாலின் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கூறினார். சனாதனத்தை எதிர்த்து திமிரோடும் திராணியோடும் பல நீதிமன்ற வழக்குகளை எதிர்கொண்டு இருக்கிறார் அவர். அதன் தொடர்ச்சியாகத்தான், பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் ஆட்சி மொழியாக ஹிந்தி, இந்தியாவின் தேசிய மொழியாக ஆக்கப்படுவதற்கு, என்றால் இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டப்படி, தேசிய மொழி என்ற ஒரு மொழியை நமக்கு இல்லை. இந்தியாவின் அடையாளம் ஹிந்தி இல்லை என பேசினார்.