கோவையில் உயர் ரக போதைப் பொருட்கள் விற்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இவர்களிடமிருந்து சுமார் ரூ.70 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள், 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதானவர்களில் ஒருவரான மகாவிஷ்ணு என்பவரின் தாயார் விஜயலட்சுமி பொருளாதார குற்றப்பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியில் உள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.