கோவை: ஹஜ் பயணிகளிடம் 36. 51 லட்சம் ரூபாய் மோசடி

52பார்த்தது
கோவை: ஹஜ் பயணிகளிடம் 36. 51 லட்சம் ரூபாய் மோசடி
கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ஹமீது என்பவரின் மனைவி அமீனா. இவர் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தாஸ் உம்ரா சர்வீஸ் சென்டர் நிறுவனத்தின் ஏஜெண்டாக கோவையில் பணிபுரிந்து வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அமீனா கோவையில் உள்ள பயணிகள் ஹஜ் பயணத்திற்கு செல்வதற்காக செலுத்திய 36 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் பணத்தை ட்ராவல்ஸ் நிறுவனத்தின் வங்கி கணக்கிற்கு அனுப்பிவைத்தார். 

ஆனால் அதன் பிறகு ட்ராவல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஜாபர் அலி ஹஜ் பயணத்திற்கு பயணிகள் யாரையும் அனுப்பாமல் தொடர்ந்து ஏமாற்றி வந்தார். மேலும் சரிவர பதில் அளிக்காததால் கோவையில் ஏஜென்ட் ஆக பணிபுரிந்து வந்த அமீனா கடைவீதி போலீஸ் ஸ்டேஷனில் நேற்று புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் ஜாபர் அலி என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி