கோவை: முன்னாள் படைவீரர்களுக்கான குறைதீர்ப்பு கூட்டம்

67பார்த்தது
கோவை: முன்னாள் படைவீரர்களுக்கான குறைதீர்ப்பு கூட்டம்
கோவை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், தற்போது படையில் பணிபுரிபவர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்ப்பு கூட்டம் மற்றும் சுயவேலைவாய்ப்பு கருத்தரங்கு வரும் 20-ம் தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பவன்குமார் தலைமை வகிக்கிறார். இக்கூட்டத்தில் கோவை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், அவர்களை சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர் குடும்பத்தினர் கலந்து கொண்டு தங்களது விண்ணப்பங்களை இரட்டை பிரதிகளில் சமர்ப்பிக்கலாம்.
இவ்வாறு கலெக்டர் பவன்குமார் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி