கோவை: வேலை வாங்கித் தருவதாக மோசடி

64பார்த்தது
கோவை: வேலை வாங்கித் தருவதாக மோசடி
கோவை,கோவை சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாத ராஜன் என்பவரின் மனைவி சரஸ்வதி ஜெகன் (51). கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு குப்புராஜ் என்பவர் சரஸ்வதி ஜெகனை நேரில் அணுகி தங்களுக்கு அரசு உயர் அதிகாரிகளை நன்றாகத் தெரியும் என்றும் உங்களது மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவது உறுதி என்றும் கூறியிருக்கின்றனர். 

இதை நம்பிய சரஸ்வதி ஜெகன் தனது மகனின் கல்லூரிச் சான்றிதழ்கள் மற்றும் பல்வேறு தவணைகளாக 39 லட்சத்து 16 ஆயிரத்து 28 ரூபாய் பணத்தை குப்புராஜ் மற்றும் அவரது கூட்டாளிகளிடம் கொடுத்திருந்தார். ஆனால் பணம் கொடுத்து ஆண்டுகள் ஆகியும் வேலை கிடைக்கவில்லை. தொடர்ந்து தான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டார். ஆனால் அவர்கள் பணத்தை திருப்பித் தராமல் தொடர்ந்து ஏமாற்றி வந்தனர். இதைத் தொடர்ந்து சரஸ்வதி ஜெகன் சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் குப்புராஜ், சாந்தி மீனா, பாரதி ஆகிய மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி