கோவை: சிறுத்தையை பிடிக்கும் போது வனத்துறையினர் தாக்குதல்!

50பார்த்தது
கோவை மாவட்டம், தடாகம், ஓணாம்பாளையம், மருதமலை ஆகிய பகுதிகளில் சிறுத்தை ஒன்று சுற்றித் திரிந்தது. இது, அப்பகுதியில் ஆடுகளை வேட்டையாடி கொன்றது. இதையடுத்து, வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்து பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
நேற்று நள்ளிரவு பூச்சியூர் கலிங்க நாயக்கன்பாளையம் பகுதியில் சிறுத்தை இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. சிறுத்தையை பிடிப்பதற்காக அங்கு சென்ற வனத்துறையினர், அதை வலை வைத்து பிடித்தனர். அப்போது, சிறுத்தை வனத்துறையினர் இரண்டு பேரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வனத்துறையினர் சிறுத்தையை மீண்டும் தாக்கியுள்ளனர். அதனால் தான் சிகிச்சை பலனின்றி சிறுத்தை உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சிறுத்தையை பிடிக்கும் போது இரண்டு பேரை சிறுத்தை தாக்கியதால் ஆத்திரமடைந்த வனத்துறையினர் சிறுத்தையை மீண்டும் தாக்கியதாக அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
கோவை மாவட்டத்தில் வனவிலங்குகளை பிடித்து இடமாற்றம் செய்யும் போது, இதுபோன்று வனவிலங்குகள் உயிரிழந்து வரும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி