கோவை: காட்டுயானைகள் மின்வேலியில் சிக்கிய காட்சிகள் வைரல்!

75பார்த்தது
கோவை அருகே முள்ளங்காடு பகுதியில், காட்டுயானைகள் மின்வேலியில் சிக்கி தவித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதியில் இருந்து, உணவு தேடி வந்த இரண்டு பெண் யானைகள் மற்றும் குட்டி யானை, அப்பகுதியில் உள்ள தோட்ட மின்வேலிக்கு அருகே நேற்று சிக்கிக் கொண்டன.
ஒரு யானை மின் வேலிக்குட்பட்டு கீழே சென்று வெளியேறிய நிலையில், குட்டி யானையும் அதே வழியில் சென்றது. மற்றொரு யானை நேரடியாக வேலியை தாண்டி சென்றது. மின் வேலியில் மின்சாரம் இல்லை என்பதால் யானைகள் பாதிக்கப்படவில்லை.
இந்த தருணங்களைப் பார்த்த பொதுமக்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். தற்போது அந்த வீடியோக்கள் வேகமாக பரவி வருகின்றன.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி