கோவை: வரத்து குறைவால் மீன்கள் விலை கடுமையாக உயர்வு!

56பார்த்தது
மீன்பிடி தடைக்காலம் மற்றும் இயற்கைச் சூழல்களின் தாக்கம் காரணமாக, கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் மீன்களின் விலை இன்று கணிசமாக உயர்ந்துள்ளது. முக்கியமாக, வெள்ளை வாவல் மீன் கிலோ ரூ. 1, 600-க்கு விற்பனையாகிறது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை மீன்களின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு கடல் பகுதியில் மீன்பிடி தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ராமேஸ்வரம், தூத்துக்குடி, நாகப்பட்டினம் போன்ற முக்கியமான மீன்பிடி மையங்களிலிருந்து மீன் வரத்து குறைந்துள்ளது.
மேலும், கேரளாவில் மீன்பிடி தடை இல்லை என்றாலும், கொச்சியில் கப்பல் கவிழ்ந்து ரசாயனங்கள் கடலில் கலந்ததால் சில பகுதிகளில் மீன்பிடிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்தும் மீன் வரத்து குறைந்து விட்டது. இந்த சூழ்நிலை கோவையில் மீன்கள் விலையை அதிகரிக்கச் செய்துள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி