கோவை: ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

65பார்த்தது
கோவை: விளைப் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்ய வேண்டும், 

மின்சார ஒழுங்குமுறை சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் கோரிக்கையை மத்திய அரசு உடனடியாக ஏற்க வேண்டும். விவசாயிகள் பெற்ற கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை ரயில் நிலைய சந்திப்பு முன்பாக ஒருங்கிணைந்த விவசாயிகள் அமைப்பினர் நேற்று பேரணியாக வந்தனர். 

விவசாயிகளுக்கு எதிராக செயல்படுவதாக கூறி மத்திய அரசைக் கண்டித்து கோஷமிட்டனர். கோவை ரயில் நிலைய சந்திப்பிற்குள் நுழைய முயன்ற விவசாயிகளை, காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். தடையை மீறி ரயில் மறியல் போராட்டம் நடத்த முயன்ற முப்பது விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

தொடர்புடைய செய்தி