கோவை: ஈமூ கோழி மோசடி - 10 ஆண்டு சிறை எட்டு கோடி அபராதம்

73பார்த்தது
ஈரோட்டையைச் சேர்ந்த குருசாமி, சுசி ஈமூ பார்ம்ஸ் என்ற பெயரில் ஈமூ கோழி வளர்ப்பு மூலம் அதிக லாபம் பெறலாம் என நம்ப வைத்து 385 முதலீட்டாளர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக 2012ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கோவை டான்பிட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை முடிவில், குருசாமிக்கு நேற்று 10 ஆண்டு சிறைத்தண்டனையும், 7. 89 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தொகையை பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களிடம் பகிர்ந்தளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் கைதான மற்ற இருவரான கதிர்வேல் மற்றும் சுரேஷ் விடுதலை செய்யப்பட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி