கோவை: டிராக்டரில் இருந்து தவறி விழுந்து டிரைவர் உயிரிழப்பு

78பார்த்தது
கோவை: டிராக்டரில் இருந்து தவறி விழுந்து டிரைவர் உயிரிழப்பு
திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகே உள்ள கானூர்புதூரைச் சேர்ந்த டிராக்டர் டிரைவர் சதீஷ்குமார் (40), திடீர் நெஞ்சுவலி காரணமாக டிராக்டரில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். சதீஷ்குமார், அன்னூர் அருகே உள்ள அல்லப்பாளையம் பகுதியில் உழவுப் பணிகளை முடித்துவிட்டு, டிராக்டரில் தனது சொந்த ஊரான கானூர்புதூர் நோக்கி நேற்று திம்மநாயக்கன்புதூர் அல்லப்பாளையம் வழியாகச் சென்று கொண்டிருந்தார். 

வசுவன் குட்டை அருகே வந்தபோது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. வலி தாங்க முடியாமல், டிராக்டரை கட்டுப்படுத்த முடியாமல் சதீஷ்குமார் அருகில் இருந்த 10 அடி ஆழமுள்ள குட்டையில் டிராக்டரை விட்டுவிட்டு, அதிலிருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி