சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி திராவிட இயக்க தமிழர் பேரவையினர் மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் அளித்து உள்ளனர்.
இது குறித்து பேட்டி அளித்த திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் அமைப்பு செயலாளர் காசு நாகராஜ்,
பெரியார் குறித்து சீமான் பொய்யான கருத்துக்களை பேசி வருகிறார். இதன் மூலமாக அரசியல் பிரச்சினைகளை திசை திருப்புகிறார் என்றார். பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு இருக்கக் கூடிய தொண்டர்களின் மத்தியில் தவறான கருத்துக்களை விதைத்தும் பிரிவினை, சட்டம் - ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்த வேண்டும் என்ற அவருக்கு வந்து இருக்கக் கூடிய அஜந்தாவின் அடிப்படையில் பேசி வருகிறார். எனவே சீமான் மீது காவல் துறை சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை காவல் ஆணையாளரிடம் அளித்து உள்ளோம் என தெரிவித்தார்.