கோவை: கோமாளிகள் பற்றி கேட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம்!

78பார்த்தது
மதுவிலக்கு விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாற்றி மாற்றிப் பேசுவதைக் கண்டித்து, அரசு நிகழ்ச்சிகளில் கோமாளிகள் பற்றிய கேள்விகளைக் கேட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தொடர்ந்து பேசியவர், அண்ணாமலை மதுவிலக்கு சம்பந்தமாக 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் பேசிய கருத்துக்கள் மாறுபட்டவை. எனவே, அரசு நிகழ்ச்சிகளில் ஒரே மாதிரி பேசாதவர்களின் கேள்விகளைக் கேட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றார். பாஜக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த செந்தில் பாலாஜி, அண்ணாமலை மதுவிலக்கு சம்பந்தமாக 2023ஆம் ஆண்டு மற்றும் 2024ஆம் ஆண்டு பேசியது என் செல்போனில் உள்ளது. 2023 ஆம் ஆண்டு அவர் பேசும் பொழுது மதுவிலக்கு என்பதே சாத்தியமில்லை, பலரின் வேலை வாய்ப்பு பறிபோய்விடும் என்று கூறுகிறார். பின்னர் 2024 ஆம் ஆண்டில் அவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்டால் மதுவிலக்கு வந்துவிடும், கடைகளை மூடி விடுவோம் என்று கூறுகிறார்கள். ஆகையால், தயவு செய்து அரசு நிகழ்ச்சிகளில் சில கோமாளிகளின் கேள்விகளைக் கேட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம். ஒரே மாதிரி பேசுபவர்கள் கேள்விகளைக் கேட்கலாம் எனக் கேட்டுக் கொண்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி