கோவை: கதவைத் திறந்து வைத்து தூங்க வேண்டாம்

71பார்த்தது
கோவை: கதவைத் திறந்து வைத்து தூங்க வேண்டாம்
கோடை வெப்பம் அதிகரிப்பதால், இரவில் காற்றுக்காக வீட்டின் கதவு மற்றும் ஜன்னலை திறந்து வைத்து தூங்குவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. கோடை வெயில் சுட்டெரிப்பதால், இரவிலும் வெப்பம் அதிகமாக உள்ளது. இதனால் கிராமப்புறங்களில் பலர் வீட்டின் கதவுகளைத் திறந்து வைத்து தூங்குகின்றனர். இதை சாதகமாக்கி திருடர்கள் வீடுகளுக்குள் புகுந்து நகை, பணத்தை திருடிச் செல்கின்றனர். 

எனவே, பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டின் கதவுகளைத் தாழிட்டு தூங்க வேண்டும். வீட்டின் முன் விளக்குகளை எரிய விட வேண்டும். வெளியூர் செல்வதாக இருந்தால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். விலை உயர்ந்த பொருட்களை வீட்டில் வைக்காமல் வங்கி லாக்கரில் வைக்க வேண்டும். வீடுகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் சந்தேக நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று இன்று கோவை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி