கோவையில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனையில் தற்போது 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் பாதிப்பு காரணமாக தினமும் 50 முதல் 60 பேர் வரை புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கிறார்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் தங்களின் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்து தங்களை பாதுகாத்துக் கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.