கோவை: தரமற்ற வீடு கட்டியவர் மீது நீதிமன்றம் நடவடிக்கை

78பார்த்தது
கோவை: தரமற்ற வீடு கட்டியவர் மீது நீதிமன்றம் நடவடிக்கை
கோவை சூலூர் குமாரபாளையத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (வயது 45) என்பவர், சூலூரைச் சேர்ந்த குமார் என்பவரிடம் வீட்டு மனை வாங்கி வீடு கட்ட ஒப்பந்தம் செய்தார். 787 சதுர அடி நிலத்தில் வீடு கட்ட ரூ. 26 லட்சம் செலவாகும் என குமார் தெரிவித்ததை அடுத்து, ஆறுமுகம் வங்கி கடன் பெற்று அந்த தொகையை செலுத்தினார். கடந்த 2021 ஜனவரி 27-ம் தேதி கிரகப்பிரவேசம் முடிந்து புதிய வீட்டிற்கு குடிபோன ஆறுமுகம், வீட்டின் கட்டுமானப் பணி தரமற்ற முறையில் இருந்ததை உணர்ந்தார். சுவர்களில் விரிசல் ஏற்பட்டிருந்ததுடன், சிமெண்ட் பூச்சு வேலையும் சரியாக இல்லை. 

இதுகுறித்து கட்டுமான உரிமையாளர் குமாரிடம் முறையிட்டும், உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. இதையடுத்து, கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் ஆறுமுகம் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி தங்கவேலு மற்றும் உறுப்பினர்கள் சுகுணா, மாரிமுத்து ஆகியோர், ஆறுமுகத்திற்கு இழப்பீடாக ரூ. 3 லட்சத்து 80 ஆயிரம், மன உளைச்சலுக்கு ரூ. 50 ஆயிரம், நீதிமன்ற செலவாக ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று நேற்று உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்தி