கோவை: தனியார் பேருந்துகளின் போட்டி- பயணிகள் அவதி!

56பார்த்தது
சத்தியமங்கலத்தில் இருந்து கோவை நோக்கி இயக்கப்படும் தனியார் பேருந்துகள், பயணிகளை ஏற்றுவதில் ஏற்படும் போட்டி காரணமாக, நகரப் பேருந்து நிறுத்தங்களில் பேருந்துகளை நிறுத்தி விட்டு மோதிக்கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இன்று காலை, என். எம். எஸ். எஸ் மற்றும் ஆர். டி என்ற இரண்டு தனியார் பேருந்து நிறுவனங்களைச் சேர்ந்த பேருந்துகள், சக்தி சாலையில் நகரப் பேருந்தை வழிமறித்து பயணிகளை ஏற்ற முயற்சியில் ஈடுபட்டன. இதில், ஒரு பேருந்தின் பிம்ப கண்ணாடி உடைக்கப்பட்டது. இதனால் இரு தரப்பு ஓட்டுநர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த சம்பவத்தால், காலையில் வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். கோவை சக்தி சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து, நகரப் பேருந்தின் உரிமையாளர் தங்கராஜ், சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார், இரு தரப்பு பேருந்துகளையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி