கோவை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!

68பார்த்தது
மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவை டாடாபாத் பவர் ஹவுஸ் அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆறுச்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பத்மநாபன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். 

அப்போது, மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கான திட்டங்கள் ஏதும் இன்றி புறக்கணிக்கப்பட்டு உள்ளது. மேலும் பட்டியலின மக்கள் மற்றும் பழங்குடியினருக்கான நிதி பெருமளவு குறைக்கப்பட்டு உள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழில்களை பாதிக்கும் ஜி.எஸ்.டி. பிரச்சினைக்கு பட்ஜெட்டில் எவ்வித தீர்வும் காணப்படாமல் உள்ளது. ஆனால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டு உள்ளது என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி