கோவை: கோவை-அவினாசி மேம்பாலம்: 92% பணிகள் நிறைவு!

59பார்த்தது
கோவை-அவினாசி சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் 92 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் நேற்று தெரிவித்துள்ளார்.
உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10. 1 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ. 1, 621 கோடி மதிப்பீட்டில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. 300 கான்கிரீட் தூண்களுடன், ஹோப் கல்லூரி, நவ இந்தியா, அண்ணா சிலை, விமான நிலையம் ஆகிய இடங்களில் ஏறுதளம் மற்றும் இறங்குதளம் அமைக்கப்பட்டு வருகிறது.
மேம்பாலப் பணிகளை நேற்று ஆய்வு செய்த ஆட்சியர் பவன்குமார், அவினாசி சாலையில் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில் இந்த உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. சாலையின் இருபுறமும் 1. 5 மீட்டர் அகலத்தில் நடைபாதையுடன் மழைநீர் வடிகால் வசதியும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 92 சதவீதப் பணிகள் முடிந்துள்ளன. மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறினார். இந்த ஆய்வின் போது, நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் சமுத்திரக்கனி, உதவி கோட்டப் பொறியாளர்கள் மகேஸ்வரி, அகிலா மற்றும் இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி