கோவை: மறுசீரமைப்பு பணி காரணமாக ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்

58பார்த்தது
கோவை: மறுசீரமைப்பு பணி காரணமாக ரயில்கள் இயக்கத்தில் மாற்றம்
கோவை வடக்கு ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி நடைபெறுவதால், சில ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மேட்டுப்பாளையம் - போத்தனூர் பயணியர் ரயில் (நாளை காலை 8: 20 புறப்படும்)போத்தனூர் - மேட்டுப்பாளையம் பயணியர் ரயில் (நாளை காலை 9: 40 புறப்படும்) அதே போல
மாற்றுப்பாதையில் ,
ஆலப்புழா - தன்பாத் ரயில் (நாளை காலை 6: 00 புறப்படும்), எர்ணாகுளம் - பெங்களூரு எக்ஸ்பிரஸ் (நாளை காலை 9: 10 புறப்படும்) இந்த ரயில்கள் இருகூர், போத்தனூர் வழியாக இயக்கப்படும். இந்த ரயில்கள் கோவை ரயில் நிலையத்திற்கு செல்லாது என்று சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.
பயணிகள் இந்த மாற்றங்களை கவனத்தில் கொண்டு தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தொடர்புடைய செய்தி