கோவை: கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வுமையம் தகவல்

60பார்த்தது
கோவை: கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வுமையம் தகவல்
தமிழ்நாட்டில் ஏப்ரல் 2, 3 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் வரும் ஏப்ரல் 2ஆம் தேதியும், கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் ஏப்ரல் 3ஆம் தேதியும் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் நாளை (மார்ச் 31) மறுநாள் (ஏப்ரல் 1) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி