கோவை: சிறுவனை வேலைக்கு அழைத்துச் சென்ற 2 பேர் மீது வழக்கு

81பார்த்தது
கோவை: சிறுவனை வேலைக்கு அழைத்துச் சென்ற 2 பேர் மீது வழக்கு
கோவை ஜங்ஷன் ரயில் நிலையத்தில் குழந்தை தொழிலாளர் தடுப்பு அமைப்பினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஒரு சிறுவனுடன் வந்த இருவரை சந்தேகத்தின் பேரில் நேற்று (டிசம்பர் 27) விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் சிறுவனை காரைக்குடிக்கு கட்டிட வேலைக்கு அழைத்துச் செல்வதாக தெரியவந்தது. இது தொடர்பாக, சிறுவனை கடத்திச் சென்ற தீபன் குமார் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் மீது கோவை ரேஸ் கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். குழந்தை தொழிலாளர் தடுப்பு அமைப்பினர் சிறுவனை பாதுகாப்பாக மீட்டு, அவனது பெற்றோரை தொடர்பு கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி