கோவை: நடுரோட்டில் தீப்பற்றிய கார்!

0பார்த்தது
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்துக் கழக நடத்துநர் ஜோதிராஜ் சென்றுகொண்டிருந்த காரில் நேற்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அவரது காரில் பெட்ரோல் மற்றும் கேஸ் இணைப்பு இருந்தது. பெட்ரோல் கசிவு ஏற்பட்டதை அடுத்து, கேஸுக்கு மாற்றிய போது தீப்பற்றியது.
தீ திடீரென காரின் முன்பகுதியில் பரவியது. அதனைக் கண்டு ஜோதிராஜ் உடனே காரிலிருந்து வெளியேறினார். தகவலறிந்து வந்த கவுண்டம்பாளையம் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர். விபத்தில் கார் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. உயிராபத்து தவிர்க்கப்பட்ட நிலையில், சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி