கோவை: புல்லட் யானை பிடிபட்டது - ஆனைமலையில் கூண்டில் அடைப்பு

73பார்த்தது
கோவை: புல்லட் யானை பிடிபட்டது - ஆனைமலையில் கூண்டில் அடைப்பு
நீலகிரி மாவட்டம் பந்தலூர் சேரம்பாடி உள்ளிட்ட வனத்தை ஒட்டி உள்ள கிராமங்களில் வீடுகளை இடித்தும், மக்களை மிரட்டி அச்சத்தில் ஆழ்த்திய புல்லட் எனும் பெயர் சூட்டப்பட்ட காட்டு யானையை பிடிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். 

அதன்படி முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் சீனிவாசன் மற்றும் விஜய் எனும் கும்கி யானைகள் உதவியுடன் நள்ளிரவு மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பின்னர் அந்த யானையை வனத்துறை வாகனத்தில் ஏற்றி பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக வளர்ப்பு முகாமிற்கு கொண்டு சென்றனர். அங்கு வந்த கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் யானையின் மயக்க நிலை தெளியும் வரை பொறுத்திருந்து யானையின் உடல்நிலை சீரானதை உறுதி செய்த வனத்துறை அதிகாரிகள் புல்லட் யானையை அங்கிருந்த கிராளில் (கூண்டு) இன்று அடைத்தனர். 

15 நாட்கள் கண்காணிப்பதற்கு பிறகு யானையின் ஆரோக்கியத்தை பொறுத்து அடர்ந்த வனத்திற்குள் விடுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி