கோவை மாவட்டம் ஆனைமலை பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன், 2022 ஆம் ஆண்டு 11 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. சிறுமியின் தாயார் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள சிறுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அருண்குமார் மற்றும் உறுப்பினர்கள் ஜெனிபர், மகேஷ் ஆகியோர் சிறுவனுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தனர். தற்போது 18 வயதாகும் அந்த சிறுவன், வேலூரில் உள்ள சிறப்பு சிறையில் அடைக்கப்பட்டான்.