கோவை: ஈஷா லைஃப் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

2பார்த்தது
கோவை ஈஷா மையத்தில் செயல்படும் ஈஷா லைஃப் பள்ளிக்கு, வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மின்னஞ்சல் மூலம் நேற்று மிரட்டல் வந்தது. இந்த மின்னஞ்சலில், தமிழகத்தில் நடைபெறும் சம்பவங்களை மடைமாற்றம் செய்ய இத்தகைய செயல் திட்டமிடப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிகிறது. இதுபற்றி பள்ளி நிர்வாகம் போலீசாரிடம் புகார் அளித்தது. அதன் பேரில் போலீசார் பாதுகாப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு, மின்னஞ்சல் அனுப்பிய நபரை கண்டறியும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். பள்ளி வளாகத்தில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி