மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனப்பகுதியில், தாயிலிருந்து பிரிந்து தனியாக சுற்றித்திரிந்த 11 மாத ஆண் குட்டி யானை, மே 27 அன்று வனத்துறையினரால் மீட்கப்பட்டது. கூத்தாமண்டி வேட்டை தடுப்பு முகாமில் அவை பராமரித்து வருகின்றனர். சத்தான உணவுகளால் குட்டி யானை சுறுசுறுப்பாகவும், பராமரிப்பாளர்களின் கட்டுப்பாட்டிலும் உள்ளது. தாயை மீண்டும் கண்டுபிடித்து, குட்டியை சேர்க்க வனத்துறை டிரோன் மற்றும் படகு மூலம் அடர்ந்த வனப்பகுதி மற்றும் பவானிசாகர் அணை அருகே தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.