கோவை: ஆண்டு விழா-மயில்சாமி அண்ணாதுரை பங்கேற்பு!

58பார்த்தது
கோயம்புத்தூர் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியின் ஆண்டு விழா நேற்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளியின் தலைமை ஆசிரியை கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன் முன்னிலை வகித்தார்.
இந்தியாவின் நிலவு மனிதர் பத்மஸ்ரீ டாக்டர். மயில்சாமி அண்ணாதுரை இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாப் பேருரை ஆற்றினார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி துணை மேயர் வெற்றி செல்வன், கல்விக்குழுத் தலைவர் N. மாலதி, கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், மாநகராட்சி கல்வி அலுவலர் C. தாம்சன், வட்டாரக் கல்வி அலுவலர் M. ரமேஷ்பாபு, மாமன்ற உறுப்பினர் M. D. மோகன், பள்ளி மேற்பார்வையாளர்கள் R. சிவசாமி, M. நிர்மலா மற்றும் P. பூங்கொடி ஆகியோர் வாழ்த்துரை இவ்வாண்டு விழாவில் வாழ்த்துரை வழங்கினர். இவ்விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள், பள்ளி மேலாண்மைக்குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் முன்னாள் மாணவர் அமைப்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி