கோவை, பீளமேடு பகுதியில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பீளமேடு பெட்ரோல் பங்க் பஸ் நிறுத்தம் அருகே உள்ள டாஸ்மாக் கடை பக்கத்தில் உள்ள பெட்டிக் கடையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அந்தச் சோதனையின் போது, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பழனிவேல் (வயது 54) என்பவர், அனுமதியின்றி மதுபாட்டில்களை வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் அவரிடம் இருந்து 30 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.