பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இடிகரை கிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த சதீஷ் (23) என்பவர் அத்திப்பாளையம் நால் ரோட்டில் மது அருந்திவிட்டு பொதுமக்களை திட்டியதாக புகார் எழுந்தது. அதேபோல், சின்ன தடாகம் தனியார் மருத்துவமனை அருகே அசன் (45) என்பவர் பொது இடத்தில் மது அருந்தி பொதுமக்களுக்கு இடையூறு செய்தார். இருவரையும் பொதுமக்களின் புகாரின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் மற்றும் தடாகம் போலீசார் கைது செய்துள்ளனர்.