கோவை: போக்குவரத்து விதி மீறல் - 2 லட்சம் பேருக்கு அபராதம்

66பார்த்தது
கோவை: போக்குவரத்து விதி மீறல் - 2 லட்சம் பேருக்கு அபராதம்
கோவை மாநகரில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 2 லட்சம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு 2 லட்சத்து 5 ஆயிரத்து 967 பேர் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் சென்றதாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மாநகரில் விபத்துகள் அதிகம் நிகழும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதால் விபத்துகள் குறைந்துள்ளன. 2023 ஆம் ஆண்டு நடந்த விபத்துகளில் 298 பேர் உயிரிழந்தனர். 862 பேர் படுகாயம் அடைந்தனர். 

ஆனால், 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் 28 வரை நடந்த விபத்துகளில் 286 பேர் உயிரிழந்ததோடு, 883 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி