கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல்: 5 பேர் கைது

74பார்த்தது
கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல்: 5 பேர் கைது
உசிலம் பட்டியைச் சேர்ந்த வீரண்ணன் மகன் கிஷோர் (19), கோவை மதுக்கரை பகுதியில் தனது சகோதரி மோனிகாவுடன் வசித்து வந்தார். இவர் திருமலையாம் பாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

சனிக்கிழமை நடைபெற்ற முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழாவின் போது, இன்ஸ்டாகிராமில் விடியோ பதிவிடுவது தொடர்பாக இரண்டாம் ஆண்டு மாணவர்களுடன் பிரச்சனை ஏற்பட்டது. விழா முடிந்த பின், மதுக்கரை பகுதியில் உள்ள உணவகத்தில் கிஷோர் தனது நண்பர்களுடன் இருந்தபோது, இரண்டாம் ஆண்டு மாணவர் அழகேஸ்வரன் மற்றும் அவரது நண்பர்கள் அவர்களை அழைத்துச் சென்று தாக்கினர்.

இதில் கிஷோர் மற்றும் அவரது நண்பர் ரோஷன் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், கிஷோரின் சகோதரி மோனிகா (21) மற்றும் உறவினர் பிரவீசன் (21) ஆகியோர் கிஷோரைத் தேடி வந்தபோது, இரண்டாம் ஆண்டு மாணவர்களான முகேஷ், நிதீஷ்குமார், சபரிபாலா கண்ணன் ஆகியோருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த மோனிகா, கீழே கிடந்த கத்தியால் மூவரையும் வெட்டி காயப்படுத்தினார். இச்சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீஸார் விசாரணை மேற்கொண்டு, மோனிகா, பிரவீசன், முகேஷ், ராஜேஸ்வரன், யுவராஜ் ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கல்லூரி மாணவர்கள் என்பதால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி