கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் சமூக நீதி போராளி கே. ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்து பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை தமிழக அரசு உடனடியாக சி. பி. ஐக்கு மாற்ற வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கா. வேல்முருகன் தலைமை வகித்தார். அமைப்பாளர் அப்துல் ஹக்கீம் மாவட்ட பொருளாளர் கிருஷ்ணசாமி தலைமை சிறப்பு பேச்சாளர் கர்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பகுஜன் சமாஜ் கட்சி உட்பட ஏராளமான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.