உலக சுற்றுச்சூழல் தினம் முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி

79பார்த்தது
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் கல்லூரியில் வேர்ல்ட் மலையாளி கவுன்சிலின் சார்பாக மரக்கன்றுகளை நடவு செய்து உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

உலக சுற்றுச்சூழல் தினம் ஆண்டு தோறும் ஜூன் 5-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. மாறிவரும் தட்பவெப்ப நிலை மாற்றத்திற்கு மரங்களின் அழிவே காரணமாகி வருகிறது.

இதனிடையே அனைவரும் மரங்களை நடவு செய்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் கல்லூரி மாணவ மாணவிகள், மற்றும் வேர்ல்ட் மலையாளி கவுன்சிலின் அமைப்பினர் , ஆரிய வைத்தியசால ஆகியோர் 500க்கும் மேற்பட்ட மரங்களை நடவு செய்தனர்.

முன்னதாக ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் சுற்று சூழலை பாதுகாப்போம், மரங்களை நடவு செய்வோம், இயற்கையை நேசிப்போம் என்ற உறுதி மொழி ஏற்று கொண்டனர்.

தொடர்புடைய செய்தி