96 எண்ணிக்கைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு

64பார்த்தது
96 எண்ணிக்கைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக்காட்சி வாயிலாக நேற்று கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண். 82க்குட்பட்ட வெரைட்டிஹால் சாலையில் ரூ. 16 கோடியே, 58 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள தலைமை காவலர் மற்றும் காவலர்களுக்கான நவீன வசதிகளுடன் கூடிய 96 எண்ணிக்கைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை திறந்து வைத்தார்கள். அதன் தொடர்ச்சியாக, இந்நிகழ்வில் மாநகர காவல் ஆணையாளர் திரு. வே. பாலகிருஷ்ணன் இ. கா. ப. , அவர்கள், மாண்புமிகு மேயர் திருமதி. கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், மதிப்பிற்குரிய துணை மேயர் திரு. ரா. வெற்றிசெல்வன் அவர்கள், தெற்கு வருவாய் கோட்ட அலுவலர் திரு. பத்ரிநாதன், காவல்துறை உதவி பொறியாளர் திரு. ஜானகிராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி